Nakkubetta Foundation

CULTURE PRESERVATION PROGRAM

CULTURE PRESERVATION PROGRAM

கோத்தகிரி அருகிலுள்ள தூனேரி குருகுலம் உயர்நிலைப்பள்ளியில்  09-03-2020 திங்கட்கிழமை அன்று நாக்குபெட்டா பவுண்டேஷன் வழங்கியமகளிர் மந்தஎன்ற தலைப்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில், இப்பள்ளியில் பயிலும் மாணவிகள் கலந்துகொண்டனர். அப்போது இன்றைய காலகட்டத்தில் பெண்களின் வாழ்க்கைமுறை எப்படி இருக்கிறது? நம் முன்னோர்கள் நம் உணவு முறையிலும் உடல் ஆரோக்கியத்திலும் மற்ற செயல்பாடுகளிலும் நமக்காக  தந்து சென்ற பல நல்ல விஷயங்களை நாம் கடைப்பிடித்து வருகிறோமா? இல்லை அது என்னவென்று தெரியாமல் மேலோட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அப்போது இதில் கலந்து கொண்ட மாணவிகள் அனைவரும் தங்களது கருத்துக்களை பகிர தொடங்கினர். அதில் நாங்கள் இது போன்ற விஷயங்களை கடைப்பிடிப்பதில்லை என்றும் எங்களது வாழ்க்கை எந்த ஒரு கசப்பான கடினமான அல்லது உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பல நல்ல விஷயங்களை நல்லது என்று தெரிந்தாலும் ஏதோ ஒரு இடைப்பட்ட மகிழ்ச்சிக்காக அதை ஏற்க மறுக்கிறது என்று தங்களது தனிப்பட்ட கருத்துக்களை கலந்துரையாடலாகவும் விவாதமாகவும்  தெரிவித்தனர். பிறகு இவ்வாறான வாழ்க்கை முறை எப்போதும் நல்லதை தராது. எந்த ஒரு நல்ல விஷயமும் முன் கசக்கும் பின்பு இனிக்கும் என்பதற்கு ஏற்ப நம் முன்னோர்கள் பெண்களின் நலனுக்காகவும் நம் கலாச்சாரத்தின் வளர்ச்சிக்காகவும் விட்டுச்சென்ற அனைத்தும் இப்பொழுது பின்பற்ற கடினமாக இருந்தாலும் சரியான முறையில் கடைபிடித்தால் எதிர்காலம் ஒரு வரமாகும் என்பது புரிகிறது எனவே இனிவரும் காலங்களில் நம் கலாச்சாரத்தின் பழக்க வழக்கங்களையும் உணவு முறைகளையும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளையும் கடைபிடிப்போம் என்று உறுதி அளித்தனர்.

Cultural awareness discussion for women was organized by Nakkubetta Foundation, held on Monday 09-03-2020 at Thuneri Gurukulam High School. The students of this school participated . The Questions like, How is the lifestyle of women today? Are we following the many good things that our ancestors passed down to us in our diet, physical health and other activities? was raised in the discussion. Then all the students who participated in it started sharing their ideas. they stated their personal views as that “we do not adhere to such things and refuse to accept it for the sake of some intermediate pleasure”.Finally all the students stated that “Everything that our ancestors left behind for the benefit of women and the development of our culture is hard to follow now but it is understandable that the future will be a boon if followed properly so we are assured that in the coming times we will follow the customs, diet and health related activities of our culture”.