Nakkubetta Foundation

ACUPRESSURE

நாக்குபெட்டா பவுண்டேஷன் ஹெத்தெய ஹெங்க அமைப்பு மற்றும் பெங்களூரில் அமைந்துள்ள அகாடமி ஃபார் அக்குபிரஷர் அண்ட் அக்குபஞ்சர் நிறுவனம் இணைந்து நடத்திய சிறப்பு அக்குபிரஷர் முகாம் ஜூலை மாதம் 16, 17 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இம் முகாமில் ISRO விஞ்ஞானி Dr.H. போஜராஜ் மற்றும் அக்கு பிரஷர் நிபுணர் திரு.கிரிஷ் சங்கர் ஆகியோர் வள நபர்களாக கலந்து கொண்டனர். இதில் அக்கு பிரஷர் மருத்துவம் பற்றிய விரிவான தெளிவான அறிமுகம் வழங்கப்பட்டது. மேலும் நலமுடன் வாழ்வதற்கான அடிப்படை முறைகள் குறித்து வளநபர்களால் ஆலோசனை வழங்கப்பட்டன. பிறகு அக்கு பிரஷர் மெடிடேஷன் மற்றும் அக்கு மசாஜ் ஆகியவை இம்முகாமில் கலந்துக் கொண்டவர்களுக்கு சிறந்த முறையில் கற்றுத்தரப்பட்டது. பிறகு இம்முகாமில் அக்குமசாஜிற்கான மாதிரி(demo) மூன்று நபர்களை வைத்து திரு.கிரிஷ் சங்கர் அவர்களால் கொடுக்கப்பட்டது. அவர் அளித்த அந்த டெமோவில் மூன்று நபர்களுக்கு அக்கு மசாஜ் பலன் கொடுத்ததை நேரில் அனைவரும் கண்டு வியந்தனர். இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு அக்குபிரஷர் மருத்துவத்தை இன்னும் ஆழமாக கற்றுக்கொள்ள ஆர்வம் உருவானதை தொடர்ந்து இப்பொழுது ஹெத்தெய ஹெங்கா அமைப்பின் பெண்கள் Dr.H. போஜராஜ் மற்றும் திரு. கிரிஷ் சங்கர் ஆகியோரிடம் பயிற்சி பெற்று வருகின்றனர்.

Nakkubetta Foundation’s, Hethaya Henga Team and Academy for Acupressure and Acupuncture, Bangalore, conducted a special acupressure camp. The resource persons for this camp were Dr.H.Bhojaraj, ISRO Scientist and Mr.Girish Sankar, Expert in Acupressure from Bangalore. The camp was held on 16th and 17th of July. Many people took part in this camp and benefited from it. Basic methods to be followed to lead a healthy life were given by the resource persons. Introduction to acupressure and single points and key points we taught. They also thought about Acu meditation and Acu massage. Mr. Girish Shankar also did live demos with three participants for Acu massage which amazed everyone with the results. The team decided not to stop at this point, they wanted to learn more and go deep in this field. The team is now practicing and experimenting many points with the guidance of Dr.H.Bhojaraj and Mr.Girish Shankar.