Nakkubetta Foundation

ONE DROP OF SPIRITUALITY

ONE DROP OF SPIRITUALITY

ஆன்மீகம் என்பது பூஜைகள் செய்வதாலும் கோயிலுக்கு செல்வதாலும் வளர்வதோடு மட்டுமல்லாமல் நாம் செய்யக்கூடிய எளிய பயிற்சியால் உள்நிலையில் பேரானந்தத்துடன் ஆன்மீகத்தின் உச்சத்தை அடைய முடியும். மேலும் சக மனிதர்களிடமும் நம் கலாச்சாரத்தின் மீதும் அன்பு செலுத்த வைப்பது ஆன்மீகமே. இந்த ஆன்மிகத்தை நம்முள் வளர்க்க ஒரு சிறந்த கருவியாக இருப்பது யோகப்பயிற்சிகள். எனவேதான் நாக்குபெட்டா பவுண்டேஷன் மற்றும் கோவை ஈஷா யோக மையம் இணைந்து எளிய யோகப் பயிற்சிகள் மூலம் ஆன்மீகத்தை தம்முள் ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு துளி ஆன்மீகம் என்ற எளிய முறை யோகப் பயிற்சி வகுப்புக்களை அறிமுகப்படுத்தியது. இந்த ஒரு துளி ஆன்மீகம் என்ற செயல்பாடு மூலம் ஒவ்வொரு ஹட்டிகளுக்கும் சென்று அங்குள்ள மக்களுக்கு அன்றாட வாழ்க்கையோடு இணைந்த எளிய முறை யோகப் பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டு வருகிறது. இச்செயல்பாடானது கடந்த 15 நவம்பர் 2021 முதல் தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சிகள் மூலம் ஒவ்வொருவரும் ஆன்மீகத்தை உணர்வதோடு மட்டுமல்லாமல் இன்றைய காலகட்டத்தில் காணப்படும் அதிகமான மன அழுத்தம் மற்றும் உடல் உபாதைகளில் இருந்தும் மீண்டு வர முடியும். புத்துணர்ச்சியுடனும் ஒரு சக்தியுடனும் செயல்பட முடியும். இந்த பயிற்சிகள் மக்களின் உள்நிலையிலிருந்து பெரும்மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஹட்டியிலும் ஏராளமான மக்கள் இதில் கலந்து கொண்டும் யோகப்பயிற்சிகள் கற்றுக்கொண்டும் பயனடைந்தனர். இந்நிகழ்வானது டிசம்பர் 31, 2021 வரை நடைபெற உள்ளது.

Spirituality is nurtured by doing poojas and going to the temple and by the simple yoga practices, which we can follow in our daily life without any obstacles, where we can reach the pinnacle of spirituality with inner bliss. And also spirituality is to love fellow human beings and our culture. Yoga exercises are a great tool to develop this spirituality in us. That is why the Nakkubetta Foundation and Coimbatore Isha Yoga Center have teamed up to introduce a simple method of yoga practice called One Drop of Spirituality to make each one feel spiritual through simple yoga exercises. This activity “One Drop of Spirituality”  is going to every hut and the people there are being taught the simple method of yoga practices that are integrated into daily life. The operation has been running successfully since last November 15, 2021. Through practicing these Simple Yoga every day, one can not only feel spiritual but also recover from the high levels of stress and physical abuse found in today’s times. Can act with freshness and these yoga have made a huge difference from the inside of the people. Lots of people in every village and school benefited by attending and learning simple yoga exercises. The event is set to run until December 31, 2021

Kokkalada

Kiloor Mynalai

Melur hosatty

Melur hatty

Manjacombai

Koderi

Denadu

Katteri

Athigaratty

Kathadimattam

Bengal Mattam