Nakkubetta Foundation

WATER REVOLUTION

WATER REVOLUTION

பஞ்சபூதங்களில் முதன்மையானதும் முக்கியமானது தண்ணீர். நாம் வாழும் இப்பூமி மூன்று பங்கு நீரினாலும், ஒரு பங்கு நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும் இந்த மூன்று பங்கு நீரும் மனித வாழ்க்கைக்கு உகந்ததா எனில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும். பெருகி வரும் மக்கள் தொகையால் நீரின் தேவையும் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் தண்ணீர் சேமிப்பு அல்லது பாதுகாப்பு என்பது இன்றைய அனைவருக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. தண்ணீரை எப்படி சேமிப்பது, அதனால் ஏற்படும் பலன்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அதை செயல்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் “நீர் புரட்சி” என்ற திட்டத்தை தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களுக்கு சென்று நீரின் முக்கியத்துவம் நீரை சேமிப்பதின் அவசியம் போன்றவற்றை பல சூழல்களின் மூலம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு கிராமங்களிலும் மரக்கன்றுகளை நடுவதன் மூலம்  நீர் புரட்சியின் அவசியத்தை பதிவு செய்தனர். இந்நிகழ்ச்சியானது மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.

Water conservation is a big challenge for everyone today as the demand for water is increasing day by day due to the growing population. How to save water,The Nakkubetta Foundation launched the “Water Revolution” project with the aim of creating awareness among the people about its benefits and implementing it. This was followed by visits to several villages in the Nilgiris district to raise awareness on the importance of water and the need to conserve water. And recorded the necessity of the water revolution by planting saplings in each village. The event was well received by the rural people. 

Anikorai

B.Maniyatty

Bygamandu

Kanneri

Kannerimukku

Kariyamalai

Keelur Denadu

KERKAMBAI

Kil Kothagiri

Madithorai

Thandhanadu