Spiritual Awareness Program
SOS (Soldiers Of Society) நாக்குபெட்டா பவுண்டேஷன் மகளிர் பிரிவில் உள்ள பெண்களுக்கு யோகா மற்றும் தியானம் தன்னையுணர்தல் போன்ற ஆன்மிக செயல்பாடுகள் கொண்ட வகுப்புகள் இணையவழியில் 48 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு பகுதியாக இந்த வகுப்பில் பங்கேற்ற அனைவரையும் குன்னூர் அருகிலுள்ள எடப்பள்ளி சித்தகிரி சாய் தர்மக்ஷேத்ரா எனப்படும் பாபா கோவிலுக்கு 10-09-2021 வெள்ளிக்கிழமை அன்று அழைத்துச்செல்லப்பட்டனர். இங்கு 10-09-2021 முதல் 12-09-2021 வரை மூன்று நாட்கள் முகாம் அமைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் இங்கு ஒரு புதுவிதமான ஆன்மீக அனுபவத்தை பெறக்கூடியதாக இருந்தது. மேலும் 12-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சித்தகிரி சாய் தர்மக்ஷேத்ராவின் நிர்வாகியான மா சக்திமயி அவர்களுடனான ஒரு அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் SOS மகளிர் பிரிவிற்கான பெண்களின் உணர்வுபூர்வமான பக்தி பாடல்கள் இடம்பெற்றது. பிறகு மா சக்திமயி அவர்கள் முகாமில் கலந்து கொண்ட அனைவரையும் பாராட்டி தனது வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கினார். மேலும் இங்கு இடம்பெற்ற ஒவ்வொரு நிகழ்வுகளும் அனைவரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. பிறகு மா சக்திமயி அவர்கள், ஆன்மீக புரிதலுக்கும் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக நம் கலாச்சாரத்தின் பழமையை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்றும் இதற்கான முதல் கட்டமாக ஒவ்வொரு கிராமமாக சென்று விவசாயம், கலாச்சார பழக்கவழக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் அதற்கான முயற்சியை இப்போதிலிருந்தே எடுப்போம் என்று அவர்களை ஊக்குவித்து உரையாற்றினார்கள். சிறந்த ஆன்மிக அனுபவத்துடன் இந்த முகாமானது இனிதே நிறைவுற்றது.
Nakkubetta Foundation conducted online Classes with spiritual activities such as yoga and meditation self-realization for women SOS (Soldiers Of Society) team for 48 days. As part of the closing ceremony, all participants were taken to the Baba Temple, also known as the Yedappalli Siddhagiri Sai Dharmakshetra near Coonoor, on Friday 10-09-2021. A three days camp was set up here from 10-09-2021 to 12-09-2021. It was a wonderful experience for everyone who attended. On Sunday 12-09-2021, A session was arranged with Maa Sakthimayi, Administrator of Siddhagiri Sai Dharmakshetra. Maa Sakthimayi then extended her congratulations and blessings to all those who attended the camp and every event held here was set to express the feelings of all. Maa Sakthimayi then encouraged all of them who were engaged in the effort to restore the antiquity of our culture, the spiritual understanding, and the development of society. And she motivated them to go to every village as the first step and create awareness about agriculture and cultural practices. The Camp was completed with spiritual experience.