Nakkubetta Foundation

Soldiers Of Society

Soldiers Of Society

இச்சமுதாயத்தின் பெண்களின் முன்னேற்றத்திற்காக நாக்குபெட்டா பவுண்டேஷன் தொடங்கிய SOS(Soldiers Of Society) பெண்களுக்கான பிரிவில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு வாழ்வில் பல அனுபவங்களை பெற்று வெற்றி பாதையில் சென்று கொண்டிருக்கும் படுகு சமூகத்தின் பெண் சாதனையாளர்கள் மற்றும் பெண் சமூக ஆர்வலர்களை கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இணையவழியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதன் மூலம் இப்பிரிவில் உள்ள பெண்கள் வாழ்க்கை, ஆன்மீகம், சமூகம், சுயசிந்தனை, யோகம், உடல் ஆரோக்கியம் போன்றவற்றை குறித்து பல தகவல்களை அறிந்து தெளிவு பெற்றனர். மேலும் இதில் மிகுந்த ஆர்வமும் தேடலும் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து ஒரு புதுமையான அனுபவத்திற்காகவும் சமுதாயம் சார்ந்த பல கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு கலந்துரையாடுவதற்காக கோத்தகிரி மசகல் அருகிலுள்ள நெல்லிமந்து என்ற இடத்திற்கு நேரடியாக அழைத்து செல்லப்பட்டு விழிப்புணர்வு முகாமானது 27-08-2021 முதல் 30-08-2021 வரை ஆகிய நான்கு நாட்கள் அமைக்கப்பட்டது. அந்த இடம் மரங்கள், மலைகள், அருவி, நீர்நிலைகளின் சத்தம், இயற்கையான காற்று போன்ற பல பரிமாணங்களை கொண்டிருந்தது இங்கு யோக பயிற்சிகள் தியான  பயிற்சிகள் போன்றவை அளிக்கப்பட்டது. பிறகு நம் படுகு கலாச்சாரத்தின் பழமையான உணவு பொருட்கள், விளையும் விதம், அவற்றின் பெயர்கள் போன்றவற்றை அறிந்து கொண்டனர். மேலும் நமது சமூகத்தின் பின்னடைவுகள் என்னென்ன, எதில் வெற்றி அடைந்துள்ளோம், நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்,  முந்தைய காலத்தில் நம் முன்னோர்களின் பக்தி, உணவு, உடை போன்ற பழக்க வழக்கங்கள் எவ்வாறு இருந்தது, இப்பொழுது நாம் அதையெல்லாம் நினைவில் நிறுத்தி அதன்படி செல்கிறோமா? இல்லையா?  என்பதைப்பற்றி  கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டது. இந்த நேரடி பயணம் ஒரு புதுமையான மற்றும் பயனுள்ள அனுபவத்தை தரக்கூடிய பயணமாக அமைந்தது. 

The SOS (Soldiers Of Society) women’s section, started by the Nakkubetta Foundation for the Advancement of Women in the community.

This event was started with awareness programs online every Sunday at 3 pm with female community activists and achievers from the Badaga community. Through this session, participants gained valuable information about life, spirituality, community, self-consciousness, yoga, physical health, etc. The Awareness Camp was set up for four days from 27-08-2021 to 30-08-2021in Masagal near Kotagiri. The place had many dimensions like the sound of trees, mountains, waterfalls, and natural air. Yoga and meditation sessions were conducted. Then they got a chance to see and learn about the growth and values of the fruits, foods, and crops used by the Badaga peoples in ancient days. The discussion was about what is the drawback of society, what have we succeeded in, and where are we lagging? What were the customs and traditions of our ancestors in the past?. This live trip turned out to be an innovative and worthwhile experience. It was organized and provided by the Nakkubetta Foundation.