SIDDHAGIRI SAI HOSPITAL
நீலகிரி மாவட்டத்தில் நவீன வசதிகளை கொண்ட மருத்துவமனை இல்லாத காரணத்தால் கிராமப்புற மக்கள் அனைவரும் மற்ற மாவட்டங்களான கோவை, திருப்பூர் போன்ற இடங்களில் அமைந்துள்ள மருத்துவமனைகளை அவசர காலங்களில் சிகிச்சைக்காக நாட வேண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இது நடுத்தர மக்களுக்கு பொருளாதார ரீதியான பெரிய சவாலாகவே இருக்கிறது. இப்பிரச்சனையை போக்கும் நோக்கத்துடனும் பாமர ஏழை எளிய மக்கள் சிறந்த சிகிச்சையை இலவசமாக பெற வேண்டும் என்ற நோக்கத்துடனும் குன்னூர் எடப்பள்ளியிலுள்ள சித்தகிரி சாய் பாபா கோவிலில் அனைவரும் பயன்பெறும் வகையிலான பல சிறப்பு அம்சங்கள் கொண்ட மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மருத்துவமனை கட்டுமான பணிகள் கடந்த 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிறகு இது மக்களுக்காக கட்டப்படும் இலவச மருத்துவமனை என்பதால் இச்சமுதாயத்தின் அனைத்து மக்களின் பங்கும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி நம் நாக்குபெட்டா ஃபவுண்டேஷனின் ஒர் அங்கமாக விளங்கும் நாக்குபெட்டா தொலைக்காட்சியில் இச்செய்தி ஒளிபரப்பப்பட்டது. இதன் தாக்கமாக ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் ஆர்வமுள்ள மக்கள் திரளாக வந்து எவ்வித எதிர்பார்ப்புமின்றி ஒவ்வொருநாளும் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு அவர்களின் ஆதரவை தந்தனர். அதுமட்டுமல்லாமல் நாக்குபெட்டா தொலைக்காட்சியில் இதை குறித்த தகவல்கள் அனுபவங்கள் அனைத்தும் ஒளிபரப்பப்பட்டது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களையும் இச்செய்தி சென்றடையும்வண்ணம் நாக்குபெட்டா தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டது.
Due to the lack of modern medical facilities in the Nilgiris district, all rural people had to go to another district for emergency treatment. To overcome these difficulties it is decided to build a multi-specialty hospital at the Siddhagiri Sai Baba Temple in Yedappalli, Coonoor to provide better treatment to the poor and common people free of cost. Following the commencement of hospital construction work in 2016, the news was aired on Nakkubetta TV which is a part of NAKKUBETTA FOUNDATION. The Proposal to telecast through Nakkubetta TV is that it would be better if all the people in the community were involved in construction work, as it is a free hospital to be built for the people.
As a result, An Enormous number of enthusiastic people from every village came forward and engaged in construction work every day and gave their support without any expectations. In addition, all information and experience about this event were broadcast on Nakkubetta TV.