Nakkubetta Foundation

KAMBUVA

ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு என்ற கருத்திற்கு ஏற்ப நவம்பர் 19ஆம் தேதி நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் ஹெத்தெய ஹெங்கா  அமைப்பு கக்குச்சி கிராமத்தில்   வனத்தையும் இயற்கை வளத்தையும் காப்போம் என்ற உறுதியோடு பந காப்ப ஹப்பா (வனம் காக்கும் திருவிழா) மிக விமர்சையாக நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் ஹெத்தெய ஹெங்கா மற்றும் கக்குச்சி ஊர் மக்கள் இணைந்து கக்குச்சி கிராமத்தில் 03-12-2022  (சனிக்கிழமை) அன்று கம்புவா நிகழ்ச்சி நடைபெற்றது. கம்புவா என்ற  நடைமுறை அக்காலத்தில் படுக சமுதாயத்தில் இருந்த நடைமுறையில் ஒன்றாகும். அதாவது ஏதேனும் ஒரு நாளில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஊரின் பொது  வேலைகளை செய்வார்கள். அதுபோல கக்குச்சியில் நடந்த அந்நிகழ்வில் ஊர் மக்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஊரில் உள்ள சோலைகளில் தேவையற்ற செடி கோடிகளை அகற்றி அங்கு நீர் ஆதாரத்தை பெருக்கும் மரங்களை நட்டனர். மேலும் அக்காலத்தில் முன்னோர்கள் பயன்படுத்திய ஊற்று நீர் ஆதாரத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு பராமரிப்பு பணிகளை செய்தனர். இந்நிகழ்வில் நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் ஹெத்தெய ஹெங்கா  அமைப்பும் ஊர் மக்களுடன் இணைந்து பராமரிப்பு பணிகளை செய்து மரங்களை நட்டனர்.

Nakkubetta Foundation’s Hethaeya Henga team and the people of  KAGGUCHI village celebrated  KAMBUVA on (03-12-22). Where there were more that  200+  people participated.  In badaga the word KAMBUVA is known as village people gathering together to do some common work . As a part of “BANA KAAPPA HABBA” the tree sapling were planted by the kagguchi village people.The Hethaeya Henga team  started working with the people of the village and helped in planting the tree saplings.The school students from MAHATHMA GANDHI SCHOOL Kagguchi also took part in the event .The students were more involved and they promised that they will look after the growth of the saplings.