FLOOD RELIEF
2015 புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஒருவாரமாக கொட்டித் தீர்த்த கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. சுமார் ஒன்றரை லட்சம் விளைநிலங்கள் நீரில் மூழ்கியும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தும் இருந்தது. இதனால் பாதிப்புக்குள்ளான சுமார் 1 லட்சம் பேர் அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்திருந்தனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான முயற்சியில் நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் ஈடுபட முடிவெடுத்து நீலகிரி மாவட்டம் படுகு சமுதாய மக்களிடமிருந்து முடிந்தவரையிலான நிதியையும் பொருட்களையும் திரட்டி வெள்ளத்தால் பாதிப்படைந்த இடத்திற்கு நேரில் சென்று மக்களுக்கான உதவிகள் செய்யப்பட்டது.மேலும் நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் தன்னார்வ தொண்டர்கள் இணைந்து ஒருவாரகாலம் அங்கேயே தங்கியிருந்து பாதிப்படைந்த மக்களுக்கான உணவுகளை அளித்தும் அவர்களுக்கு அடிப்படை தேவையாகவுள்ள பொருட்களை வழங்கியும் சேவையாற்றியது. இந்த முயற்சியில் பலரும் பயனடைந்தனர்.
Heavy rain lashed the Cuddalore district for a week in 2015, disrupting normal life in various parts of the district, Thus the Nakkubetta Foundation decided to engage in an effort to meet the basic needs of the victims and to raise as much funds and materials as possible from the people of the Nilgiris District Badaga community, to go directly to the flood affected area and provide relief to the people. In addition, the Nakkubetta Foundation volunteered to stay there for a week to provide food for the affected people and provide them with basic necessities. Many have benefited from this effort.