21.07.2019 வெள்ளிக்கிழமை நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் வாயிலாக ஆர்கானிக் நீல்கிரிஸ் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆர்கானிக் முறையில் முள்ளங்கி, தேயிலை, ஸ்ராபெர்ரி போன்றவற்றை உற்பத்தி செய்து வரும் திரு.சாமு அவர்களின் விவசாயம் செய்யும் நிலத்திற்கு ப்ராவிடென்ஸ் கல்லூரி மாணவர்களை அழைத்துசென்று கலந்துரையாடல் நடைபெற்றது நாக்குபெட்டா பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் திரு.இராமகிருஷ்ணன் அவர்கள் ஆர்கானிக் நீல்கிரிஸ் முக்கியத்துவம் பற்றியும் மற்றும் கல்லூரி மாணவர்களாலும் ஆர்கானிக் மறையில் விவசாயம் செய்ய முடியும் என்பதனையும் மேலும் ஆர்கானிக் நீலகிரியாக மீண்டெடுக்கும் சாத்திய கூறுகள் போன்றவற்றை விரிவாக எடுத்துரைத்தார். இதில் பல மாணவர்கள் ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்ய முன்வந்தனர்.
21.07.2019 – Friday – Awareness program was held based on the purpose of ‘Organic Nilgiris’. Mr. Samu has been producing radishes, tea and strawberries organically. Nakkubetta Foundation Managing Trustee Mr.Ramakrishnan took the Providence College students to their farmland and held a discussion with Mr. Samu about Organic Farming and its importance