நாக்குபெட்டா பவுண்டேஷன் “ஹெத்தெய ஹெங்கா” குழுவினர் 17 செப்டம்பர் 2024 அன்று T.மணிஹட்டி கிராமத்திற்கு சென்று உள்ளூர் கலாச்சாரம், மரபுகள், உணவு, சடங்குகள் மற்றும் வாழ்க்கை முறை பற்றிய மதிப்புமிக்க கருத்துக்களையும் தகவல்களையும் அங்குள்ளவர்களிடம் கேட்டு அறிந்ததும் குறிப்பாக 80 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுடன் தொடர்பு கொண்டு நம் கலாச்சார வாழ்க்கைமுறை பற்றிய அவர்களின் அனுபவங்களைப் பெற்றதும் மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது. மேலும் இப்பயணம் “ஹெத்தெய ஹெங்கா” குழுவினருக்கு கலாச்சார பண்பாட்டை பற்றிய ஆழத்தை அறிய வைத்த ஓர் அனுபவமாக அமைந்தது.
Heathaya Henga team visited T. Manihatty village on 17 September 2024 for a Community Engagement program, focusing on our beloved elderly community. We were humbled to interact with residents over 80 years young, gaining valuable insights into local culture, traditions, food, rituals, and lifestyle.