MUPERUM VIZHA
31-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் வழங்கிய ராவ் பகதூர் ஆரி கௌடர் ஐயா அவர்களின் 50வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நடத்தப்பட்ட படுகு கதெய கமலு போட்டிக்கான பரிசளிப்பு விழா, நங்கவ நங்க அறவோ நிகழ்ச்சியின் ஓராண்டு நிறைவு விழா, நாக்குபெட்டா ரேடியோ துவக்க விழா ஆகிய மூன்று நிகழ்வுகளின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக அரசின் ஓய்வுபெற்ற கூடுதல் தலைமை அதிகாரி திரு.Dr.சுந்தரதேவன் IAS , படுகு சமுதாயத்தின் முன்னால் தலைவரும் பேராசியருமான திரு.ஐயாறு ஐயா, ஓய்வுபெற்ற விங் கமாண்டர் திரு.ஜெயபிரகாஷ் பெள்ளி, முன்னால் இஸ்ரோ விஞ்ஞானி திரு.Dr.போஜராஜன் மற்றும் படுகு சமுதாயத்தின் பிரபல பாடகர் சோலூர் திரு.G.ராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந்த விழாவினை நங்கவ நங்க அறவோ நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் செல்வி.கௌஷிகா அவர்கள் தொகுத்து வழங்கினார். முதலில் திரு.ஐயாறு ஐயா அவர்கள் விளக்கேற்றியும் தூனேரி திரு.முருகன் குழுவின் பக்திப் பாடல்களுடனும் இந்த விழாவானது இனிதே தொடங்கியது. பிறகு ஃபவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் திரு.இராமகிருஷ்ணன் அவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்று பின் இந்த விழா நடத்துவதற்கான நோக்கத்தை அனைவரிடமும் பகிர்ந்தார். அதனைத் தொடர்ந்து ஓராண்டு நிறைவு விழாவை சந்தித்த நங்கவ நங்க அறவோ நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களான செல்வி.தீஷா,செல்வி.ஒனிஷா,செல்வி. தீபிகா செல்வி. ஜமுனா மற்றும் செல்வி.மோனிஷா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவர்கள் பெற்ற அனுபவங்கள் அதனால் ஏற்பட்ட பயன்கள் குறித்து அனைவரிடமும் பகிர்ந்தனர் பிறகு நாக்குபெட்டா ரேடியோவை சிறப்பு விருந்தினர்கள் ஒன்றிணைந்து மிகச்சிறப்பாக துவக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து திரு.ஹரிஷ் அவர்கள் நாக்குபெட்ட ரேடியோவின் நேரடி வர்ணனை (Live Commenraty) தந்தார். அவரின் பேச்சு அனைவரின் சிந்தனையையும் ஈர்க்கும் வண்ணம் இருந்தது. பிறகு திரு.இராமகிருஷ்ணன் அவர்கள் இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி அவர்களை கௌரவித்தார். பின் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் சிறப்புரையாற்றி அனைவரையும் மகிழ்வித்தனர். அதனைத்தொடர்ந்து நங்கவ நங்க அறவோ நிகழ்ச்சியின் பங்கேற்ற குழந்தைகள் அனைவருக்கும் நினைவு பரிசளித்து கௌரவித்தனர். பிறகு ராவ்பகதூர் ஆரி கௌடர் ஐயா அவர்களின் 50வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நடத்தப்பட்ட படுகு கதெய கமலு பாட்டு போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தூனேரி திரு.முருகன் குழுவின் பஜனை பாடல்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்ட குழந்தைகளுடன் அவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் திரளாக வந்து கலந்துகொண்டனர். இறுதியில் தன்னார்வலர் திருமதி.ஜெயந்தி மணிகண்டன் அவர்கள் நன்றியுரை வழங்க ஆடல் பாடலுடன் இந்த முப்பெரும் விழா இனிதே நிறைவுற்றது
On Sunday 31-10-2021, the Nakkubetta Foundation hosted three events to mark the 50th anniversary of Rao Bahadur Ari Gowder. Badagu Katheya Kamalu competition, the first anniversary of the Nangava Nanga Aravo program, and the Nakkubetta Radio launch were inaugurated.Mr. Dr.Sunderdevan IAS (R),( Addl.Chief Secretary (Retd) Tamilnadu) , a former leader in the Badaga community, and Professor Mr. Aiyaru Iya, Retired Wing Commander Mr. Bellie Jayaprakash , former ISRO Scientist Mr. Dr. Bojrajan and Famous Singer in the Badada community Mr.G.Raman attended as a special guest. The event was hosted by Ms. Kaushika, Coordinator, Nangava Nanga Aravo. The event started with the lighting of the lamp by Mr. Aiyaru Aiya and the devotional songs of Mr. Murugan’s group from Thuneri. Mr. Ramakrishnan, Managing Trustee of the Foundation then welcomed all those present at the event and then shared the purpose of the event. Nakubetta Radio was launched by the special guests. Following this, the participants of the Nangava Nanga Aravo program, Ms. Deesha, Onisha, Deepika, Jamuna and Monisha shared their experiences of attending the event and their benefits. Following this, Mr. Harish gave a live commentary on the radio they spoke. His speech was the color that captivated everyone’s thinking. Then Mr. Ramakrishnan presented a memento to the special guests of the festival and honored them. Then the special guests made a special speech and entertained everyone. Following this, all the children who participated in the Nangava Nanga Aravo program were honored with gifts. Following this, all the children who participated in the Nangava Nanga Aravo program were honored with gifts. Prizes were then awarded to the winners of the Badagu Katheya Kamalu Song Competition held on the occasion of the 50th anniversary of Raw bagadur Ari Gowder Iya.This was followed by the Bajan songs of the Thuneri Mr. Murugan group and dance. The event was attended by a large number of their parents and relatives along with the honored children. Finally, Mrs. Jayanthi Manikandan, a volunteer, thanked the audience and the event concluded with the dance